கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில், பொருத்தமான நேரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தகுந்த முடிவை எடுப்பார் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்ட பிரதமர், நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி நீதித்துறை, நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியலமைப்பை மதிப்பவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு சரியான தீர்மானத்தை எடுக்கும் திறன் ஜனாதிபதிக்கு இருப்பதாகத் தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
கண்டியிலிருந்து பௌத்த பிக்குகள் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். ஆரம்பத்தில் ஞானசார தேரர் சிறை உடைகளை அணிய வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பேரணி, பின்னர் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையாக மாறியது.
நேற்று (15) கண்டிக்குச் சென்ற பிரதமர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விகாரைகளுக்குச் சென்று மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களைச் சந்தித்தார்.
இதன்போது, அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தேசிய கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு ஆவணத்தையும் அவர்களிடம் கையளித்தார்.
Friday, October 16, 2026
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு - பொருத்தமான நேரத்தில் ஜனாதிபதி முடிவெடுப்பார் – பிரதமர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
