Our Feeds


Saturday, October 17, 2026

Zameera

நாடு தழுவிய மின் தடையின் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

 


இலங்கையில் ஏற்பட்ட நாடு தழுவிய மின் தடையின் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், கட்டம் கட்டமாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, விசாரிக்கப்படும் சாத்தியமான காரணங்களில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.


ஏற்கனவே ஒரு பகுதிக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல பகுதிகளுக்குக் கட்டம் கட்டமாக மின் விநியோகம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


காரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் அதேவேளை, நாடளாவிய ரீதியில் மின்சாரத்தை இயன்றவரை விரைவாக மீள்விப்பதே எமது நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »