Our Feeds


Friday, October 30, 2026

Zameera

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு: மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!

 

பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொபேய்கனே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


 


இது தொடர்பாக இன்று வினவியபோது, கடமை தவறியமைக்காகவே அவர்கள் இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.


 


கொபேய்கனே, பெத்தேகம பகுதியில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு கொபேய்கனே பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.


 


பின்னர், பொலிஸ் காவலில் இருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 27 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் உயிரிழந்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »