Our Feeds


Friday, October 16, 2026

Zameera

கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் மண்மேடு சரிவு

 

மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் தற்போது நிலவி வரும் பலத்த மழை காரணமாக கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள மண் மேட்டின் ஒரு பகுதி இன்று (16) மீண்டும் சரிந்து விழுந்துள்ளது.


 


இதன் காரணமாக ரயில் பாதையும் தடைப்பட்டுள்ளதுடன், ரயில் ஊழியர்கள் அந்த இடத்திற்குச் சென்று மண்ணை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


 


'டித்வா' சூறாவளி நிலையைத் தொடர்ந்து மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மண்மேடு சரிந்து ரயில் பாதையில் விழுந்த மூன்றாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »