Our Feeds


Friday, October 16, 2026

Zameera

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 316 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

 


ஜனாதிபதி நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 316 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நாளை (17) நடைபெறவுள்ளது.




மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டமாக ரஜரட்ட பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 




அதன்படி, அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான கண் பரிசோதனைகள் கடந்த மாதம் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஒக்டோபர் 10 ஆம் திகதி ருகுணு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.




பிரித்தானியாவின் Stroud Rotary Club மற்றும் Wish மன்றத்தின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், கண் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 316 மாணவர்களுக்குத் தேவையான மூக்குக் கண்ணாடிகள் நாளை அந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்படவுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »