Our Feeds


Monday, October 19, 2026

SHAHNI RAMEES

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

 


இந்திய சிவில் மற்றும் ராணுவ விமானங்கள் தங்களது

வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இருநாட்டு பதற்றம்.

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுக்கு பல தடைகளை விதித்தது. இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க முதன் முதலில் தடையை விதித்தது. இருநாட்டு பதற்றம் காரணமாக, இந்தத் தடை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.


தற்போது மீண்டும் இத்தடை நீட்டிக்கப்பட்டு, வருகிற நவம்பர் 24-ந்தேதி வரை அமலில் இருக்கும் என பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »