Our Feeds


Wednesday, October 21, 2026

ShortNews

முடியுமென்றால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் - அரசாங்கத்துக்கு சஜித் சவால்!



ஜனாதிபதியும் பிரதமரும் சொல்லப்போகும் ஒரே பொய்யையாவது சரியாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டுவிதமான பொய்களைக் கூறி வருகின்றனர்.

இந்நாட்டை ஆட்சி செய்வது "தெளிவான பொய்களைக்" கூறும் அரசாங்கம் என்பது பாலர் வகுப்புச் சிறுவனுக்குக்கூடத் தெரியும். நாட்டு மக்கள் அரசாங்கத்துடன் தான் இருக்கிறார்கள் என்றால், முடியுமானால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம் பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தொழிலாளர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி வீதிப் போராட்டம் நடத்தி அரச அதிகாரத்தைக் கைப்பற்றி, தற்போது அரசாங்கம் கனவுலகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றது. பணவீக்கம் அதிகரித்து வாழ்க்கைச் செலவும், அதிகரித்துள்ளது வறுமை என்பது பன்முக வறுமையாக மாறி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அழுத்தத்திற்குள்ளான நிலைமையே தற்சமயம் காணப்படுகின்றது. இது குறித்து அரசாங்கத்தின் பதில்கள் என்ன?

உணவுகளின் விலை உயர்வு, போஷாக்குப் பிரச்சினைகள், போசாக்கு குறைபாடு அதிகரிப்பு ஆகியவற்றுக்கான தீர்வுகளை அரசாங்கம் தனது வேலைத்திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பள வருமானத்தின் கொள்வனவு திறன் மட்டம் வீழ்ச்சியடைந்து பெற்றுக்கொள்ள முடிந்த பொருட்களின் அளவு மட்டங்களும் இன்று குறைந்துபோயுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்காத்திலும் மின்சாரக் கட்டணம் கூட்டப்படவுள்ளது. பொய்ப் பிரசார அரசியலின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த அரசாங்கம், தாங்க முடியாத மின்சாரக் கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பதில்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »