Our Feeds


Thursday, October 8, 2026

SHAHNI RAMEES

சிவுரையை கலட்டும் அளவுக்கு ஞானசார தேரர் என்ன தவறு செய்தார்?

 


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பிரதமர் ஹரிணி

அமரசூரியவும் பௌத்தர்கள். பௌத்த நாடான இலங்கையில் பௌத்த பிக்கு ஒருவரின் காவி உடையை எவருடைய அழுத்தம் அல்லது ஆலோசனையின் அடிப்படையில் அகற்றியிருந்தாலும், அந்த நடவடிக்கையை உண்மையான பௌத்தர்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள் என கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் விசனம் வெளியிட்டார்.நகரங்களை ஆராய்க


கொழும்பில் இன்று (8) ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். போலியான பௌத்தர்களும், பெயரளவிலான பௌத்தர்களும் இருக்கலாம். ஆனால் உண்மையான பக்தியுள்ள எந்தவொரு பௌத்தரும் ஞானசார தேரரின் காவி உடையை அகற்றிய நடவடிக்கையை அங்கீகரிக்கமாட்டார்.


யாராவது தவறு செய்திருந்தால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஞானசார தேரர் இவ்வாறான தண்டனைக்கு உள்ளாகும் அளவுக்கு தவறிழைத்துள்ளார் என நாங்கள் கருதவில்லை. அவரது காவி உடையை அகற்றுவதற்கு முன்னர் முப்பீட மகாநாயக்க தேரர்களுக்கு விடயத்தை அறிவித்து அவர்களின் ஆலோசனையைப் பெற்றிருந்தால், இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் சென்றிருக்காது.


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் பௌத்தர்கள். எனவே, இந்த நடவடிக்கை அரசாங்கத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். மக்கள் விடுதலை முன்னணி தடைசெய்யப்பட்ட காலத்திலும், பத்மசிறி திரிமாவிதான வைத்திய மாணவர் கொல்லப்பட்ட போதும் மகா சங்கத்தினர் மக்களுக்காக முன்னின்றனர். அவற்றை மறந்துவிடக்கூடாது.


ஜனாதிபதி அவர்களே, முப்பீட மகாநாயக்க தேரர்களுடன் உடனடியாக கலந்துரையாடி, ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தவறு செய்திருந்தால், பௌத்தத்துக்கு அமைவாக அனைவருக்கும் சமமான முறையில் நியாயமான தண்டனை வழங்கப்பட வேண்டும்.



இன்று பௌத்தர்கள் அரசியல், இன, சாதி வேறுபாடுகளால் பிளவுபட்டுள்ளனர். இந்தப் பிளவே எமது அழிவுக்கு வழிவகுக்கிறது. அரசாங்கத்தை கைப்பற்றுவதற்காகவோ கவிழ்ப்பதற்காகவோ அல்லாமல், பௌத்தர்களின் அடையாளம், உரிமை, பிக்குகளின் உரிமை மற்றும் சாசனத்தை பாதுகாக்க அனைத்து சிங்கள பௌத்தர்களும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும். அதன் மூலம் எமது மதமும் இனமும் அழிவதைத் தடுக்க முடியும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்கள்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »