Our Feeds


Saturday, October 24, 2026

Zameera

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

 

கிழக்கு, ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று சனிக்கிழமை (24) முற்பகல் 11.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை 1.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த பகுதிகளில் சில இடங்களில் கடும் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக சில பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »