Our Feeds


Sunday, October 18, 2026

ShortNews

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மட்டுமே அரசாங்கம் தலைவணங்கும் - ஜனாதிபதி


நீதிமன்றப் பொறிமுறையினால் வழங்கப்படும் தீர்மானங்களே நாட்டின் சட்டம் தொடர்பான மிகச் சரியான இறுதித் தீர்மானங்களாகும் எனவும், அந்த அனைத்துத் தீர்மானங்களுக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் முழுமையாகக் கட்டுப்படுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டப் பெண்கள் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கு அப்பால் தம்மிடமிருந்து வேறு தீர்மானங்களை எவரும் எதிர்பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டின் சட்டத்தின் இறுதி விசாரணையைக் கோதுவது நீதிமன்றமே எனவும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கிய பின்னர் அதனை நீக்குமாறு கோரி கூச்சலிடுவதால் எந்தப் பயனும் இல்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகள் மூலம் சட்டத்தின் ஆட்சியைப் பேண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தைச் செயற்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம் உரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சட்டத்தின் சமத்துவம் இல்லாத நாட்டில் எதிர்கால சந்ததிக்குப் பாதுகாப்பு இருக்க முடியாது என்றார்.

சட்டம் எல்லோருக்கு முன்பும் சமமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதுவரை காலமும் தமக்குச் சட்டம் செயற்படுத்தப்படாது எனச் சிந்தித்து வந்தவர்கள் மீதும் தற்போது சட்டம் சமமாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »