Our Feeds


Thursday, October 1, 2026

Zameera

பெரிய வெங்காய உற்பத்தி மீண்டும் சீராக்கப்பட்டுள்ளது - நாமல் கருணாரத்ன


 கடந்த ஆட்சியில் ஏற்பட்ட பசளைப் பிரச்சினையால் பெரிய வெங்காய உற்பத்தியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் ஆளாகினர், எமது ஆட்சியில் அது சீராக்கப்பட்டு விட்டது , அதே நேரம் பாரிய எண்ணிக்கையாளர்களான நுகர்வோருக்கு,  ஒப்பீட்டு ரீதியில் சிறிய எண்ணிக்கை கொண்ட விவசாயிகள் வழங்கும் சேவை பாராட்டத்தக்கதாகும், என பிரதி காணி, விவசாய, கால்நடை உற்பத்தி அமைச்சர் நாமல் கருனாரத்ன தெரிவித்தார்.


பேராதனை கன்னொறுவை விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற இலங்கை விவசாயத்திணைக்களத்தின் ஆய்வுகள் மற்றும் பரிசளிப்பு தொடர்பான  வருடாந்த  மகாநாட்டில் (எஸ்டா)  அவர் கலந்து உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும்  தெரிவிக்கையில்,


நெதர்லாந்து என்பது எமது நாட்டை விட சிறிய ஒரு நாடாகும். எமது நாட்டில் காணப்படும் காலநிலை வாய்ப்புக்கள் அந்நாட்டில் குறைவு. இருப்பினும் விவசாய ஏற்றுமதியில் சர்வதேச ரீதியில் அவர்கள் எம்மை விட மிக முன்னேறிக் காணப்படுகின்றனர்.



காரணம் புதிய கண்டுபிடிப்புக்களையும், விஞ்ஞான தொழில் நுட்ப அறிவையும் முறையாகப் பயன்படுத்தி அவர்கள் விவசாயத்துறையில் முன்னேறியுள்ளமையாகும்.


சிலமாதங்களுக்கு முன்  ஒரு ஹெக்டயர் பரப்பில் 10,000 கிலோ நெல் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு உச்ச எல்லை ஒன்று நிர்ணயிக்க துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி  திட்டமிடப்பட்டது.


ஆனால் சில நாட்களில் திருகோணமலைப் பிரதேச விவசாயி ஒருவர் தெரிவித்தார், தான் ஒரு ஹெக்டயருக்கு 12,000 கிலோ உற்பத்தி செய்வதாக, எனவே விவசாயிகளது அனுபவம் ஆற்றல் என்பன மிக முன்னோக்கிச் சென்றுவிட்டது என்றார்.


விவசாயத்துறையில் சாதனைகள் புரிந்த பலர் பிரதி அமைச்சரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »