Our Feeds


Saturday, October 31, 2026

Zameera

சட்டவிரோத மதுபானத்தைக் கடத்திய நபர் கைது!

 

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் மைல்கல் பகுதியில் 262 லீற்றர் 500 மில்லிலீற்றர் (350 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்தைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



கட்டுநாயக்க பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே, குறித்த சட்டவிரோத மதுபானம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காருடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் தங்கொட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரென முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »