Our Feeds


Friday, October 16, 2026

Zameera

கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா ; அமெரிக்க, தென்கொரிய நாடுகளிடையே பதற்றம்

 

வடகொரியா, கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணைகள் இரண்டினை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த புதன்கிழமை (14) ஜப்பான் கடலில், “ஹெரோ கிம் குன் ஒக் ” (Hero Kim Kun Ok) என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 


அமெரிக்கா மற்றும் தென்கொரிய நாடுகளை இலக்குவைத்து வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன் பணிப்புரையின் கீழ் பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மோதல் நிலைமையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேச்சுவார்த்தை முயற்சிகளையும் வடகொரிய ஜனாதிபதி நிராகரித்திருந்தார். 


இந்நிலையிலேயே வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலின் ஊடாக ஏவுகணை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 


இந்த ஏவுகணை சோதனையானது தரை வழியாக மட்டுமன்றி, கடல்வழியாகவும் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என வடகொரியா பிற நாடுகளுக்கு செய்தி பகர்வதாக கருதப்படுகிறது. இதனால் அமெரிக்க, தென்கொரிய நாடுகளிடையே பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »