Our Feeds


Friday, October 16, 2026

ShortNews

தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது!


ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரி நடைபெற்ற நடைபயணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தாம் உள்ளிட்ட குழுவினருக்கு கிடைத்த மக்கள் ஆணையின்படியே செயற்பட்டு வருகின்றார்.

கடந்த ஆட்சிக் காலத்தைப் போல் அல்லாமல், தற்போது நாட்டின் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால், அந்த நடைபயணமாக வந்த தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட்டதாக கருத நேரிடும் எனவும் கே.டி. லால் காந்த மேலும் குறிப்பிட்டார்.

"எவ்வாறாயினும், எமது தேரர்களுக்கும், பொதுமக்களுக்கும், அனைத்து தரப்பினருக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். அதாவது, மக்கள் ஆணையைப் பாருங்கள். எங்களுக்குக் கிடைத்த மக்கள் ஆணையைப் பாருங்கள்.

அந்த மக்கள் ஆணையின் அடிப்படையில்தான் ஜனாதிபதி தீர்மானங்களை எடுக்கின்றார். அதேபோல் அரசாங்கமும் மக்கள் ஆணையின்படியே தீர்மானம் எடுக்கிறது. இந்த மக்கள் ஆணையில், சட்டத்தின் ஆட்சியைக் கோரும் மக்கள் ஆணைதான் உள்ளது. அந்த திசையில்தான் நாடு திருப்பப்பட்டுள்ளது. அது யாருக்கும் தெரியும்.

எனவே, நடைபயணமாக வந்துள்ள தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடியதொரு விடயம் அல்ல. அதனை நிறைவேற்ற முடியாது. அதனை நிறைவேற்றினால் ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்கள் ஆணைக்கு முரணாகச் செயற்பட்டதாகிவிடும். அதனால், மக்கள் ஆணைக்கு முரணாகச் செயற்பட எக்காரணம் கொண்டும் முடியாது. இந்தைக் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய கோரிக்கை அல்ல. அதனை எமது தேரர்கள் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு விடயமாகும்." என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »