நாட்டின் தேசிய இயற்கை பாரம்பரியமான காவந்திஸ்ஸ யானையின் துயரமான மரணம் குறித்த உண்மையை வெளிக்கொணர்வதற்காக பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் பிரேரணையொன்றை கையளிப்பதற்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.
இதன் பிரகாரம், குறித்த பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (21) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினது பங்கேற்புடன் இடம்பெற்றது.
நாட்டின் தேசிய இயற்கை பாரம்பரியச் சின்னமாகக் கருதப்படும் காவந்திஸ்ஸ யானையின் மரணம் குறித்த உண்மையை வெளிக்கொணர்வதும், இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியுள்ளதை உறுதி செய்வதும், அந்த யானைக்கு நீதியைப் பெற்றுத் தருவதுமே இந்த பிரேரணையின் நோக்கமாகும்.
Wednesday, October 21, 2026
காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய விசேட குழு தேவை - எதிர்க்கட்சி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
