Our Feeds


Tuesday, October 20, 2026

ShortNews

மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு!


மொரட்டுவை - சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (20) இரவு 8.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கடையொன்றில் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அக்கடையின் உரிமையாளர் எனத் தெரியவருகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »