கல்முனை வடக்கு வைத்தியசாலை ஆடை விவகாரம்;
முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது!-இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சிபாரிசு!-
இது தொடர்பில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அறிவிப்பதுடன் பரிந்துரைக்கப்பட்ட சீருடைக்கு மேலதிகமாக, தலையை மூடுதல், நீண்ட கை உடை மற்றும் கால்சட்டை ஆகியவற்றை அணிய விரும்பும் எந்தவொரு பணியாளரும் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதைத் குறித்த வைத்தியசாலைக்கு தெளிவுபடுத்துமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, வைத்தியசாலையின் எந்தவொரு பணியாளராலும் முறைப்பாட்டாளர்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளவும் ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
