Our Feeds


Monday, October 26, 2026

ShortNews

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவும் - ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை!


மூன்று மகா நாயக்க தேரர்களின் தலையீட்டின் கீழ் கலஹொடஅத்தே ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி இந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“கலஹொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகம், மகா நாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கpணங்க ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க அன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என உயர்நீதிமன்றத் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலஹொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பேரணி மற்றும் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இவை பாரிய தவறுகளாகும்.

அதேபோல், அவரது காவி உடையை அகற்றுமாறு உத்தரவிட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துவது உசிதமானது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »