Our Feeds


Thursday, October 22, 2026

SHAHNI RAMEES

ஞானசார தேரர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார்!

 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நாளை (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார் என புத்தசாசன அமைச்சு, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபைக்கு அறிவித்துள்ளது.


திருத்தப்பட்ட சிறைச்சாலை உத்தரவுகளுக்கு அமைவாக, காவி உடைகளுடன் அவர் நாளை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


எனினும், 'அத தெரண' எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் அநுநாயக்கர் பேராசிரியர் கொடபிடியே ராகுல தேரர், ஞானசார தேரர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார் என்பது குறித்து சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார மகாநாயக்க தேரருக்கு புத்தசாசன அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் 'அத தெரண' புத்தசாசன பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவிடம் வினவியபோது, ஞானசார தேரரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அது குறித்து மகாநாயக்க தேரருக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »