Our Feeds


Monday, October 19, 2026

SHAHNI RAMEES

குவைத்திலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்!

 

குவைத்திலிருந்து இலங்கை நோக்கி வந்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். தீவுகள் ஆராயுங்கள்

திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விமானத்தினுள் குழந்தை பெற்றுள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாகக் குவைத் நாட்டுக்குச் சென்றிருந்தார்.

இவர் குவைத் நகர் விமான நிலையத்திலிருந்து அல் ஜசீரா விமானச் சேவைக்குச் சொந்தமான  விமானத்தில் இலங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே, விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் எவ்வித அசௌகரியமுமின்றிப் பிரசவம் இடம்பெற்றுள்ளது.

பொதுவாகக் கர்ப்பத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ள பெண்கள் விமானப் பயணங்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை. 

எனினும், குறித்த பெண் தனது கர்ப்பத்தைக் மறைப்பதற்காகத் தனது உடலுக்கு இறுக்கமான ஆடையை அணிந்து பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


விமானத்தில் பிரசவம் இடம்பெற்றதை அடுத்து, விமானி உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினார். 

விமானம் தரையிறங்கிய உடனேயே தயாராக இருந்த நோயாளர் காவு வண்டி , வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தாயையும் குழந்தையையும் பொறுப்பேற்றனர்.

பிரசவிக்கப்பட்ட ஆண் குழந்தையும் தாயும் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு போதனா  வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »