Our Feeds


Friday, October 30, 2026

Zameera

இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தில் விரிவான திருத்தங்கள் அவசியம் – ஐ.நா. வலியுறுத்தல்!

 

பல தசாப்தங்களாகக் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தில் (PSTA), சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு முரணான முக்கியமான பிரிவுகளை நீக்கி, விரிவான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.




2026 செப்டெம்பர் 22ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட இந்தச் சட்டமூலம் தொடர்பாக விசேட மதிப்பீட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், முந்தைய சட்டமூலங்களுடன் ஒப்பிடுகையில் சில சாதகமான முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காணப்படும் அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான மற்றும் தன்னிச்சையான பல ஏற்பாடுகள் புதிய சட்டமூலத்திலும் மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »