மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குத் தலைமறைவாக இருக்க உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வங்கி உத்தியோகத்தர் ஒருவரை, எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம செவ்வாய்க்கிழமை (07) உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட களணியைச் சேர்ந்த தமித் அஞ்சன வனிசேகர என்ற சந்தேகநபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குற்றவாளியான தேரருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருந்தும், சந்தேகநபர் தனது மோட்டார் காரில் ராஜகிரியவிலிருந்து அளுத்கம அல்லது எல்பிட்டிய பகுதிக்குத் தேரரை ஏற்றி சென்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவும் தற்போதைய சட்டத்திற்கு மதிப்பளிக்காமலும், நீதிமன்ற உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமலும், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றங்களைப் புரிந்தமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காரியங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
Wednesday, October 7, 2026
BREAKING: ஞானசார தேரர் தலைமறைவாக இருக்க உதவியவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
