2023 டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகம, பெலேன பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டுச் சந்தேகநபர்களுக்கு எதிராக மாத்தறை மேல்நீதிமன்றத்தில் இன்று (07) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ஏனைய எட்டுச் சந்தேகநபர்களும் இன்று மாத்தறை மேல்நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மாத்தறை மேல்நீதிமன்ற நீதிபதி நந்தன அமரசிங்க முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 08 சந்தேகநபர்களுக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், அந்த நான்கு சரீரப் பிணையாளர்களில் இருவர் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்பதும் பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Wednesday, October 7, 2026
BREAKING: முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
