ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான லலித் கன்னங்கர எனப்படும் 'பஸ் லலித்' என்பவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை (19) பிற்பகல் அவிசாவளை நீதவான் பிரமோத்ய ஜயசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
