Our Feeds


Thursday, November 19, 2026

SHAHNI RAMEES

மாகாண மட்ட பேச்சுப் போட்டியில் முதலிடம்! - கொட்டாஞ்சேனை கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரியின் வரலாற்றில் புதிய மைல்கல்!



கொட்டாஞ்சேனை கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்

கல்லூரியின் வரலாற்றில் புதிய மைல்கல்! மாகாண மட்ட இரண்டாம் மொழிப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவானார் மாணவி பாத்திமா ஹனான்!


கொழும்பு 13, கொட்டாஞ்சேனை கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரியின் வரலாற்றில் மற்றுமொரு பெருமைக்குரிய சாதனையாக, மாகாண மட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் மொழி (சிங்களம்) பேச்சுப் போட்டியில் அக்கல்லூரியின் தரம் 09 மாணவி பாத்திமா ஹனான் முதலாம் இடத்தைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


2028ஆம் ஆண்டில் தனது 50ஆவது ஆண்டு நிறைவான பொன்விழாவைக் கொண்டாடவுள்ள இக்கல்லூரியின் வரலாற்றில், இரண்டாம் மொழிப் பேச்சுப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதன்முறையாக முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சாதனையாகும்.


இந்த வெற்றியானது மாணவி பாத்திமா ஹனானின் தனிப்பட்ட திறமைக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரம் மட்டுமன்றி, அவரை இரவு பகலாக அர்ப்பணிப்புடன் தயார்படுத்தி, அவரிடமுள்ள திறமையைச் சரியான முறையில் அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வந்த ஆசிரியை  திருமதி. S.P ஹமீத் அவர்களின் அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றியுமாகும். 


மாணவியின் இந்தச் சாதனைக்குப் பங்களித்த ஆசிரியை அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகட்டும்.


இச்சாதனையைப் படைத்த மாணவி பாத்திமா ஹனானுக்கு பாடசாலையின் அதிபர் ஏ.எஸ்.எம். சப்ரின், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட முழுப் பாடசாலைச் சமூகமும் தமது நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


எதிர்வரும் தேசிய மட்டப் போட்டியிலும் மாணவி பாத்திமா ஹனான் தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடி, தனது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என அனைவரும் மனமார வாழ்த்துகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »