Our Feeds


Wednesday, November 4, 2026

ShortNews

துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!


கொழும்பு ஹெவ்லொக் டவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதெஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐகுல் ஷெரகசினா (Aigul Sheragasina) என்ற பெண் ஆகியோர் பிரதிவாதிகளாக நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

கடந்த 2025 மே 20ஆம் திகதி வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் உரிய அனுமதிப்பத்திரமின்றி தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் குறித்த குற்றத்திற்கு உதவி, ஒத்தாசை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்டமா அதிபரால் இருவருக்கும் எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »