Our Feeds


Wednesday, November 18, 2026

ShortNews

சஷி வீரவங்சவுக்கு எதிரான சிறைத்தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்!


முறையற்ற வெளிநாட்டுக் கடவுச்சீட்டு ஒன்றைச் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியது.


கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் சமர்ப்பித்த மேன்முறையீட்டைப் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அந்த மேன்முறையீட்டை நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி, திறந்த நீதிமன்றத்தில் ஆஜரான சஷி வீரவங்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம், குறித்த தண்டனையைச் செயற்படுத்துவதற்காக அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் பணித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »