Our Feeds


Showing posts with label # update # update#news#new updates #Breaking News #Education #New #New updates#world #New updates#world#News. Show all posts
Showing posts with label # update # update#news#new updates #Breaking News #Education #New #New updates#world #New updates#world#News. Show all posts

Monday, May 25, 2026

Zameera

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு


 vதென்மேற்கு பருவப் பெயர்ச்சி நாடளாவிய ரீதியில் படிப்படியாக நிலைபெற்று வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் 

இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tuesday, December 16, 2025

SHAHNI RAMEES

நீங்கள் தான் அவுஸ்திரேலியாவின் உண்மையான ஹீரோ... நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்; - துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடித்தவருக்கு பொதுமக்கள் கௌரவம் !


 அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பிரபலமான

Thursday, November 13, 2025

Zameera

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket!


 ஆப்பிள் நிறுவனம், ஒரு ‘துணித் துண்டினால்’ ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, $230 (ரூ. 70,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.


உயர்மட்ட ஜப்பானிய பிராண்டான ‘இஸ்ஸே மியாக்கி’ (Issey Miyake) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புப் வடிவமைப்பை இந்த வாரம் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


இந்த இஸ்ஸே மியாக்கி வடிவமைப்பு, இணையம் மூலமாகவும், உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள் மூலமாகவும் வெளியிடப்படும் வரையறுக்கப்பட்ட பதிப்புக் சாதனமாகும்.


இது 2025 நவம்பர் 14 ஆம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் இடங்களிலும், அத்துடன் பிரான்ஸ், சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் apple.com மூலமாகவும் கிடைக்கும்.


“ஐபோனை உங்கள் சொந்த பாணியில் அணிவதற்கான மகிழ்ச்சி” என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஐபோன் Pocket வடிவமைக்கப்பட்டுள்ளது.


இது காலுறை போன்ற வடிவமைப்புடையது என்றும், வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் இரண்டு அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் Pocket-ஐ உருவாக்கும் முக்கிய நோக்கம், ஆப்பிள் ஐபோன் தயாரிப்புகளின் அழகியல் அம்சத்தையும் பயன்பாட்டுப் பன்முகத்தன்மையையும் சமூகமயமாக்குவதாகும்.

Sunday, September 21, 2025

Zameera

ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு விஜயம்


 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (செப்டம்பர் 22) அமெரிக்காவிற்கு புறப்பட்டு செல்லவுள்ளார். 


ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

அதேநேரம் எதிர்வரும் புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். 

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் உடன் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, August 18, 2025

SHAHNI RAMEES

பாலஸ்தீனத்தில் நீதி நிலை நாட்டப்படும்வரை உறுதியுடனும், அச்சுறுத்தலுக்கு அஞ்சாமலும் நின்று உண்மையைப் பேசுவோம்! - உலமா சபை பிரகடனம்

 




2025.08.17

1447.02.22

 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய

Wednesday, July 30, 2025

Zameera

வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்தியாவுக்கு வரி விதிக்கப்படும்


 இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Monday, July 14, 2025

Zameera

சொத்துக்களை அறிவிக்காத அரச ஊழியர்களுக்கு அபராதம்


 சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை ஏராளமானோர் சமர்ப்பிக்க உள்ளதாகவும், நாளைய தினத்திற்கு பிறகு அறிவிப்புகளை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன், அபராதம் விதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று பிற்பகல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து நாளை முதல் தாமதமான நாட்களுக்கான அபராதம் அறவிடப்படும். 

2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, 2025ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிவிப்புகளை மின்னணு சமர்ப்பிப்பு முறை நடைமுறைக்கு வரும் வரை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஜூன் 30 ஆம் திகதிக்குள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் தங்கள் அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி காலகட்டத்தில் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

அதற்கான சலுகைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இன்னும் சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். 

அதன்படி, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி அந்த அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படும் என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Friday, July 11, 2025

Zameera

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு


 தரமற்ற மனித இம்யூனோகுளோபுளின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ட்ரயல் அட்பார் உத்தரவிட்டுள்ளது.


Saturday, May 10, 2025

ShortNews

BREAKING: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் - ட்ரம்ப் அறிவிப்பு!

 



அமெரிக்காவின் தலையீட்டையடுத்து இந்தியாவும் - பாகிஸ்தானும்

Wednesday, April 9, 2025

Zameera

நாங்கள் எந்த நாட்டிடமும் மண்டியிட மாட்டோம்


 எந்த நாட்டின் முன்னாலும் நாங்கள் மண்டியிட மாட்டோம் என்றும் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினூடாக எந்தக் காட்டிக்கொடுப்பும் இடம்பெறாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (08) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘இந்தியப் பிரதமரின் விஜயத்துடன் 07 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டோம். சுகாதாரம், மின்சக்தி, டிஜிட்டல் பொருளாதாரம், கிழக்கு மாகாண அபிவிருத்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளுக்காகவே இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

ஆனால், இந்த ஒப்பந்தத்தினூடாக நாட்டை காட்டிக்கொடுத்துள்ளோம் என்றும் கூறுகிறார்கள். இவற்றில் நீண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் நீண்டகால பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஒருசில ஒப்பந்தங்கள் எங்களின் அரசாங்கத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டவை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதுதொடர்பில் கவனம் செலுத்தி அநேகமான மாற்றங்களை செய்துள்ளோம்.



நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இருக்கின்றன. அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இதில் கைச்சாத்திட நடவடிக்கை எடுத்தோம். இந்திய சமுத்திர வலய பாதுகாப்பு தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பொறுப்பு இருக்கிறது. அதற்கமைய, இருநாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் பாதுகாப்பு பிரதானிகள், பாதுகாப்பு அமைச்சுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய அரசாங்கத்துக்கு முன்வைத்ததன் பின்னரே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். இதில் பயங்கொள்ள எதுவுமில்லை. தேவைக்கு ஏற்றாற் போன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக இந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு அப்பால் செயற்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தம் மாத்திரமே. இவற்றில் எந்த ஒப்பந்தமும் நாட்டுக்கு விரோதமானவை அல்ல. விரோதமான ஏற்பாடுகளை நீக்கிவிட்டே நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்கும் வகையிலேயே இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம்.

நாங்கள் கடந்த அரசாங்கங்களைப் போன்றல்ல. எந்த நாட்டின் முன்னாலும் மண்டியிட மாட்டோம். மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்வதே எங்களின் அவசியமாகும். தற்போதைய ஜனாதிபதியின் கடந்த கால வெளிநாட்டு விஜயங்களின்போது எங்களின் நிலைப்பாடுகளை தெளிவாக அறிவித்திருந்தோம். நாட்டு மக்களுக்காக நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளோம். ஏற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் அவற்றை தெளிவாகக் கூறியுள்ளோம். வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் சகல சலுகைகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றை பொறுப்பேற்கும் அரசாங்கமும் நாங்கள் இல்லை. இதனூடாக எந்த காட்டிக்கொடுப்பும் இடம்பெறாது’’ என்றார்

Tuesday, April 8, 2025

SHAHNI RAMEES

இஸ்ரேலிய இராணுவத்திற்கு AI தொழிநுட்பத்தினை வழங்கும் Microsoft - எதிர்ப்பு தெரிவித்த பெண் பணிநீக்கம்! #VIDEO

 


இஸ்ரேலிய இராணுவத்திற்கு மைக்ரோசொப்ட்  நிறுவனம்

Saturday, March 15, 2025

SHAHNI RAMEES

SLMCயின் வெற்றிடமான MP பதவி யாருக்கு? வௌியான அறிவிப்பு!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல்

SHAHNI RAMEES

தேசபந்துவின் மனைவி மற்றும் மகனிடம் CID வாக்குமூலம் பதிவு!

 


நீதிமன்றத்தைத் தவிர்த்து வரும் முன்னாள் பொலிஸ்மா

Friday, March 14, 2025

SHAHNI RAMEES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு! #PHOTOS

 


புனித ரமழான் மாதத்தையிட்டு,

Zameera

கிராம சேவை உத்தியோகத்தர்களும் தொழிற்சங்கப் போராட்டம்


 கிராம சேவை உத்தியோகத்தர்கள், இன்று (14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக, இலங்கை கிராம அலுவலர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார்

Thursday, March 13, 2025

SHAHNI RAMEES

யாழ்ப்பாணத்தில் நாங்க தான்! - 17 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம் - அமைச்சர் சந்திரசேகர்



யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய

Wednesday, March 12, 2025

Zameera

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழுத் தலைவரானார் சுகத்

 

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராட்சி முன்மொழிந்தார், மேலும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க அதை வழிமொழிந்தார்.

நேற்று (11) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்றக் குழுவின் தொடக்கக் கூட்டத்தின் போது இத்தேர்வு இடம்பெற்றது.

மேலும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார நவரத்ன, சட்டத்தரணி சுசந்த தொடவத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் முறையே பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோரால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார்கள்.

இந்தக் குழுவை நிறுவுவது சமத்துவம், நீதி மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை நோக்கி கூட்டாக எடுக்கப்பட்ட ஒரு தீர்க்கமான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது என்று சபாநாயகர் வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிறைவான மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே முதன்மையான தொலைநோக்காக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதை அடைவதற்கு, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் பிற சேவைகளுக்கு சமமான அணுகல் உறுதி செய்யப்படும் ஒரு சமூகத்தை உறுதி செய்வதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.

புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் சுகத் வசந்த டி சில்வா, தனது கருத்துக்களை வெளிப்படுத்தி, குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.

ஒரு பாராளுமன்றம் என்ற வகையில், இந்த குழுவின் முக்கிய எதிர்பார்ப்பு, மாற்றுத்திறனாளிகள் மீதான பொதுவான இலங்கையர்களின் பார்வையை மிகவும் உணர்திறன் மற்றும் நேர்மறையான ஒன்றாக மாற்றுவதாகும் என்று அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான 28 ஆண்டுகால பழமையான சட்டத்தை திருத்தி, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய தேசியக் கொள்கையை திருத்துவதே குழுவின் நோக்கமாகும் என்று தலைவர் மேலும் குறிப்பிட்டார். கூடுதலாக, மாற்றுத்திறனாளிகளுக்கு பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகளை வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பு கடந்த 14 ஆண்டுகளாக திறம்பட செயல்படுத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தீர்ப்பை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய குழு தலையிடும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

Monday, March 3, 2025

Zameera

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு


 நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 27, 2025

Zameera

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்




 பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வினாத்தாள்களை தயாரிப்பதற்கு வளவாளர் தொகுதியொன்றையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கான பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (27) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

கடந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்த மூன்று வினாக்களை ஒத்த மூன்று வினாக்கள், பரீட்சைக்கு முந்திய தினம் குருநாகல் பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரினால் தனது மேலதிக வகுப்பு சமூக ஊடகக் குழுவில் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்வதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்த மூன்று தீர்வு நடவடிக்கைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சம்பவத்துடன் தொடர்புடைய மனுவின் பதின்மூன்றாவது பிரதிவாதிக்கு, மூன்று மில்லியன் ரூபாவும் ஆறாவது மற்றும் ஒன்பதாவது பிரதிவாதிகள் என குறிப்பிடப்பட்டவர்களால் 2 மில்லியன் ரூபாவும் அரசாங்கக் கட்டணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள விடயங்களின் அடிப்படையில், வினாத்தாள் தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசியக் கிளையினூடாக மட்டுமே உரிய வினாக்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளுதல், அந்தச் செயற்பாடுகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கிளையிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்தல், இரகசியக் கிளைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் கடுமையாகப் பரிசோதித்தல், வினா தயாரிப்பு குழக்களுக்கு புதிய உறுப்பினர்களை ஆட்சேரப்புச் செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் மூலம் ஒரு வளவாளர் தொகுதியையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளில் ஒருவரான தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளரை வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலிருந்து உடனடியாக நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு விசாரணை முடிவை தெரிவிப்பதற்கும், சம்பளம் இன்றி பணியை விட்டு இடைநிறுத்துவதற்கும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் தெரியவந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஆசிரியரும் அவரது மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் ஒழுக்காற்று அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு, அந்த ஆசிரியரின் முழு சேவைக் காலத்திற்கும் நடைமுறைக்கு வரும் வகையில் பரீட்சைக் கடமைக்குத் தடை விதிக்கவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அவரது ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிரிஉல்ல வலய அலுவலகத்தினால் இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தி, ஏற்கனவே அவரை பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், புலமைப்பரிசில் வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு நிகரான வினாக்களை தனது வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்ட குருநாகல் மலியதேவ மாதிரிப் பாடசாலையின் ஆசிரியர் மற்றும் தனியார் வகுப்புகளை நடத்தும் ஒருவருக்கு ஐந்து வருட பரீட்சை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால், பரீட்சைக்கு தோற்றிய எந்த ஒரு பரீட்சார்த்திக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பரீட்சைக்கு முன் கலந்துரையாடப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்கி வினாத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ததால் பரீட்சை மதிப்பீடு பணி இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், 2024.12.31 ஆந் திகதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்த பின்னர், வினாத்தாள் மதிப்பீட்டு பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதற்கான வெட்டுப்புள்ளிகளை மிக விரைவில் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Tuesday, February 25, 2025

Zameera

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்


  

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் கடுமையான போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு தப்பியோடிய கைதிகள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.