
மக்கள் சேவையை கைவிடமாட்டோம் - ஜீவன் தொண்டமான்
"எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படாது இ.தொ.காவின் மக்கள் சேவை தொடரும் - ஜீவன் தொண்டமான்"


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற நிலையில், முர்து பெர்னாண்டோ இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இவர், 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
இந்நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்கும் இரண்டாவது பெண்மணியாக முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளார்.

இதன்படி, ஒட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாம் பயன்படுத்தும் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்டபோது பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம்.
இம்முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது பேருந்து கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது.
கட்டண திருத்தத்துக்கான சூத்திரத்தின் அடிப்படையில் இம்முறை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பசறை பகுதியில் மண்சரிவினால் முற்றாக தடைப்பட்ட பசறை - லுணுகல வீதியின் ஒரு பாதை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படவுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் இன்றும் திறக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையும் வருமான வரி செலுத்துவதற்காக திறந்து வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.