Our Feeds


Showing posts with label #Braking news #Braking news.#Braking news #Braking news.#Braking news #Braking news.#Braking news.#Trending. Show all posts
Showing posts with label #Braking news #Braking news.#Braking news #Braking news.#Braking news #Braking news.#Braking news.#Trending. Show all posts

Monday, November 6, 2023

SHAHNI RAMEES

கிரிக்கெட்டால் கொழும்பு அரசியலில் குழப்பம்...!

 





அதிவிசேட வர்த்தமானி ஒன்றினூடாக இலங்கை

Friday, June 23, 2023

ShortNews

விமானத்தை கடத்துவது குறித்து பேசிய இளைஞர் விமானத்தில் வைத்து கைது! - நடந்தது என்ன?



விமானத்தை கடத்துவது குறித்து தொலைபேசி மூலம் உரையாடிக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் விமானப் பயணியான ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 


டெல்லியிலிருந்து மும்பை நோக்கி பறக்கவிருந்த விஸ்தாரா எயார்லைன்ஸின் யூகே 996  விமானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விமானம் புறப்படுவதற்கு முன்னர், தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த மேற்படி இளைஞன், 'ஹைஜாக்' என சத்தமிட்டாரென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சோதனையிடப்பட்டதுடன், விமானத்திலும் தேடுதல்கள் நடத்தப்பட்டன. அதன் விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது.

இச்சம்பவத்தினால் விமானப் பயணம் 4 மணித்தியாலங்கள் தாமதமடைந்தது. மாலை 6.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் இரவு 10.30 மணிக்கே புறப்பட்டுச் சென்றது.

23 வயதான ரித்தேஷ் சஞ்சய்குமார் ஜூனேஜா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளாரென விஸ்தாரா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமான ஊழியர்களின் முறைப்பாட்டையடுத்து ரித்தேஷ் கைது செய்யப்பட்டாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, June 21, 2023

ShortNews

BREAKING: கொட்டாவை பகுதியில் துப்பாக்கிச் சூடு



கொட்டாவை தர்மபால வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tuesday, June 20, 2023

ShortNews

2023 LPL போட்டி அட்டவணையை அறிவிப்பு - முதல் போட்டியில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு அணிகள் மோதல்!



லங்கா பிரீமியர் லீக் 2023 கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் முதல் போட்டி யாழ்ப்பாண கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

ShortNews

போலி PHI அதிகாரியை பிடித்து பொலிசில் ஒப்படைத்த கடை ஊழியர்கள் - நடந்தது என்ன?



பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி மோசடி செய்த ஒருவரை ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனா்.


நேற்று (19) பிற்பகல் ரம்புக்கனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய திக்பிட்டிய, அரநாயக்க பிரதேசத்தை சேர்ந்தவா் என தொிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர் ரம்புக்கனை நகரில் உள்ள கடையொன்றுக்கு சென்று பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி பணத்தினை கோாிய போது கடையின் ஊழியா்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


சந்தேக நபர் இன்று (20) கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, June 12, 2023

ShortNews

பொரளையில் அதிரடி சோதனை - 35 பேரை கைது செய்த அதிரடிப்படை!



கொழும்பு - பொரளை பகுதியில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட கூட்டு சோதனை நடவடிக்கையில் குறைந்தது 35 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும், ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு பேரும், கஞ்சாவுடன் ஆறு சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


மேலும், 2 வாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும், பிடியாணை நிலுவையில் உள்ள இரண்டு சந்தேக நபர்களும், மேலும் 19 சந்தேக நபர்களும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில், ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ஹெரோயின் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும் 26 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.


மேலும், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து ஐஸ் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாக கருதப்படும் 215,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.


சந்தேக நபர்கள் இன்று (12) புதுக்கடை மற்றும் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.