Our Feeds


Thursday, August 15, 2019

www.shortnews.lk

சற்று முன் கிரான்பாஸில் இடம் பெற்ற பாதால உலக கோஷ்டி மோதலில் ஆனமாலு ரங்க உட்பட 2 பேர் கொலை

 



கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (15) மாலை 4.15 மணியளவில் இரு முச்சக்கர வண்டிகளில் வந்த இரு குழுக்களினால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடுத்த முச்சக்கர வண்டியில் வந்த இருவரை மன்னா கத்திகளால் தாக்கி கொலை செய்துள்ளனர். 

இதன்பொது பாதாள உலக குழு உறுப்பினரான ஆனமாலு ரங்க என்பவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவத்தில் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »