Our Feeds


Tuesday, August 6, 2019

www.shortnews.lk

சட்ட மா அதிபரும், இணைப்பு செயலாளரும் நீதி மன்றத்தை அவமதித்ததாக பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு.

 



சட்ட மா அதிபர் தப்­புல டீ லிவேரா மற்றும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் இணைப்புச் செய­லாளர் அரச சட்­டத்­த­ரணி நிஷாரா ஜய­ரத்ன ஆகியோர் நீதி­மன்றை அவ­ம­தித்­துள்­ள­தாக பிர­தம நீதி­ய­ரசர் மற்றும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலைவர் ஆகி­யோ­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.


இல. 104. 158 சேனா­நா­யக்க வீதி, நாவல என்ற முக­வ­ரியைச் சேர்ந்த பீ.டி,வீ சேன­பால என்ற நபரால் இந்த முறைப்­பாட்டுக் கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தடுக்கத் தவ­றி­ய­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ மற்றும் கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர ஆகி­யோ­ருக்கு எதி­ராக கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் வழக்கின் பிர­தி­வா­தி­க­ளான இரு­வ­ரையும் பிணையில் விடு­விக்க கொழும்பு பிர­தம நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வினால் வழங்­கப்­பட்ட உத்­த­ரவு தவ­றா­னது எனவும், அடிப்­ப­டை­யற்ற பக்­க­ச்சார்­பா­னது எனவும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்ட ஊடக அறிக்கை இந்த முறைப்­பாட்­டுக்­கான கார­ண­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜூலை 9 ஆம் திகதி மேற்­படி பிர­தி­வா­திகள் இரு­வ­ரையும் நீதிவான் பிணையில் விடு­வித்தார். இந்த பிணை உத்­த­ரவை சவா­லுக்கு உட்­ப­டுத்தி சட்ட மா அதி­பரால் கொழும்பு மேல் நீதி­மன்றில் மீளாய்வு மனு­வொன்று முன்­வைக்­கப்­பட்­டது.

இத்­த­கைய மீளாய்வு மனு­வொன்று மேல்­நீ­தி­மன்­றத்­துக்கு அனுப்­பப்­ப­டு­வ­தாக சட்ட மா அதி­பரின் இணைப்புச் செய­லாளர் நிஷாரா ஜய­ரத்­ன­வினால் ஊடக அறி­வித்­த­லொன்று விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. பிணை வழங்­கப்­பட்­டமை பக்­க­ச்சார்­பான விடயம் எனவும், புறக் கார­ணி­களின் அழுத்­தங்­களால் நீதிவான் இந்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாகவும் கடந்த ஜூலை 18 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட குறித்த அறிக்­கையில் பகி­ரங்­க­மாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அதற்­க­மைய, கடந்த ஜூலை 22 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட ஊடக அறிக்­கை­யொன்றில், உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் குழாம் முன்­னி­லையில் விசா­ரிக்­கப்­படும் மனித உரிமை மனு உள்­ளிட்ட வழக்­குகள் மீத­மாக உள்­ளதால் தமது கட்­சிக்­கா­ரர்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­வ­தாக பிர­தி­வாதி தரப்பு சட்­டத்­த­ரணி முந்­தைய ஊடக அறிக்­கைக்கு எதிர்ப்பு வெளி­யிட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது, சட்ட மா அதி­ப­ருக்கு தெரிந்தே அவ­ரது உத்­த­ர­வு­ட­னேயே இந்த ஊடக அறிக்கை அனுப்­பப்­பட்­ட­தாக சட்­டத்­த­ரணி நிஷாரா ஜய­ரத்ன தெரி­வித்தார். எனினும், அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை அவர் மறுத்­தி­ருக்­க­வில்லை.

எனினும், கொழும்பு பிர­தம நீதி­வானின் உத்­த­ரவு நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ சட்ட மா அதி­பரால் பகி­ரங்­க­மாக விமர்­சித்­தமை மற்றும் பிர­தம நீதி­வா­னுக்கு எதி­ராக தனிப்­பட்ட கருத்­து­களை தெரி­வித்­ததன் ஊடாக நீதி­மன்­றத்­துக்கு அவ­ம­திப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக இந்த முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
சட்ட மா அதி­பரின் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து, குறித்த முறைப்­பாட்டில் நீதி­வானின் உத்­த­ரவு தொடர்பில் சட்ட மா அதி­பரின் கருத்து, “சட்­ட­வி­ரோத”, “நியா­ய­மற்ற”, “எதேச்­சா­தி­கா­ர­மான உத்­த­ரவுஆகிய சொற்­பி­ர­யோ­கங்­களால் நீதி­வா­னுக்கு கடு­மை­யான அவ­ம­திப்பு ஏற்­பட்­டுள்ள அதே­வேளை, நிந்­திப்­ப­தற்­கான வாய்ப்பும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், சுயா­தீன அதி­காரம் கொண்­டுள்ள நீதி­மன்றம் தொடர்பில் பொது­மக்­களின் மனதில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டி­ருந்த நம்­பிக்­கையை சிதைப்­ப­தற்கு சட்ட மா அதி­பரின் ஊடக அறி­வித்தல் கார­ண­மா­கி­யுள்­ள­தாக குறித்த முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய, நீதி­மன்றை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து, குறித்த தரப்­பினர் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய மற்றும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொடவிடமும் கோரப்பட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »