Our Feeds


Thursday, August 15, 2019

www.shortnews.lk

தேவையற்ற வகையில் மதத்தளங்கள் அமைக்க இனிமேல் அரசு அனுமதியில்லை - பிரதமர் திட்டவட்டம்.

 


பலவந்தமாகவோ அல்லது அநாவசியமான வகையிலோ புதிதாக எந்தவொரு மத ஸ்தலங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ் ஆதீனத்துடனான சந்திப்பின்போதே இதனை கூறினார்.
மதங்களுக்கியடையில் தற்போது காணப்படும் புரிந்துணர்வு அற்ற தன்மையினை இல்லாது செய்யும் பொறுப்பினை மத சபைகளுக்கு பொறுப்பாக்குவதாகவும், மத தலங்களை புனர் நிர்மானம் செய்வதற்கும் , பாதுகாப்பதற்கும் தொல்பொருள்  திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
இளம் தலைமுறையினரும், சிறுவர்களம்  சிறந்த மத கொள்கை,  சிறந்த  அபிவிருத்தி செயற்திட்டம் உள்ளிட்ட  விடயங்களுக்கு ஈடுப்படுத்தப்பட வேண்டும். அடிப்படைவாதம், வெறுப்புணர்வு உள்ளிட்ட விடயங்களில் இருந்து  இளம் தலைமுறையினரை மீட்டெடுக்கும் பொறுப்பு மத  போதனை  நிறுவனங்களுக்கு உண்டு. மத குருமார்கள் இவ்விடயங்களில்  முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »