அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட
நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்
ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய தியேட்டருக்கு அருகாமையில்
காணியொன்றிலிருந்து இனந்தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த குறித்த கைக்குண்டே
சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட இக்கைக்குண்டு தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார்
அந்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தினரும் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையினை
மேற்கொண்டுள்ளனர்.





