எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில்
தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை
கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் எந்த இறுதித்
தீர்மானத்துக்கும் வரவில்லை.
அரசியல் கூட்டணியின் யாப்பை திருத்துவது உட்பட்ட பல
விடயங்களில் இணக்கம் காணப்பட்டன.
அதேசமயம் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடும்
விடயத்தை தீர்மானிப்பதற்கும் – கூட்டணி
அறிவிப்பு தினத்தன்று வேட்பாளரை அறிவிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்
எடுத்து அறிவிக்க இன்றைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தமது சம்மதத்தை
வழங்கியுள்ளனர்.
இதன்படி அடுத்துவரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சி, பாராளுமன்ற
– நிறைவேற்றுக் குழுக்களை கூட்டி ஜனாதிபதி வேட்பாளர்
விடயத்தில் ஒரு முடிவை எடுக்குமென தெரிகிறது.
