வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவலை பிட்டவீன் விக்கடன் தோட்ட பகுதியில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரணைகளை வட்டவலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி விக்கடன் தோட்டபகுதியில் சுகயீனம் காரணமாக 70 வயதுடைய ராகை என்ற தாயின் சடலம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் நேற்று (10) வட்டவலை பொலிஸ் நிலையத்தில் விக்டன் தோட்ட மக்கள் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட வட்டவலை பொலிஸார் குறிப்பிடுகையில், குறித்த தோட்ட பகுதியில் வசித்து வந்த ஏழுபது வயதுடைய ராகை என்ற தாயை சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை மகனின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்த வந்தாகவும் இரண்டு வருடங்களின் பின் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கபடுகிறது.
தாய் சுகயீனம் காரணமாக 09 ஆம் திகதி உயிர் இழந்த நிலையில் காணபட்டதாகவும் எனது மகனும் கணவரும் இணைந்து சடலத்தை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாகவும் இதுவரையிலும் சடலத்தை எங்கு கொண்டு சென்றனர், என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என மகனின் மனைவியால் வட்டவலை பொலிஸாருக்கு வழங்கபட்ட வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த தாயினை மகன் கொலைசெய்து கொண்டு சென்றிருக்கலாம் என தோட்டமக்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சடலத்தையும் மகன் மற்றும் பேரபிள்ளையையும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் வட்டவலை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
