கொழும்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்வொன்றில் பௌத்த மதத்திற்கு எதிராக பேசினார் என்ற குற்றம் சாட்டப்பட்டு பொது பல சேனாவினால் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரனை இன்று (12.09.2019) நடைபெற்றது.
கொழும்பு, பிரதான நீதவான் நீதி மன்றின் நீதிபதி லங்கா ஜயதிலக அவர்களின் முன்னிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சட்டமா அதிபரின் கருத்தை அறியும் வரை எதிர்வரும் 2020 பெப்ரவரி 14ம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன், சகோ. அப்துர் ராசிக் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையும் அடுத்த வழக்கு தவனை வரை நீக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
