அமைச்சுப்பதவியை ஏற்காத காரணத்தை கோட்டாவிடம் விளக்கினார் உதய கம்மன்பில.
"அமைச்சு பொறுப்புகள் கட்சியின் முக்கியமான தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே 10 பேர் கொண்ட அமைச்சரவையை அமைக்க இருந்தும் அது இப்போது 15 பேர் வரை நீண்டுள்ளது. எனவே அமைச்சரவையை நியமிப்பதில் உங்களுக்கு உள்ள சங்கடத்தை கருத்திற்கொண்டு அமைச்சுப்பொறுப்பு எதனையும் எடுக்காதிருக்க தீர்மானித்து உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்"
இவ்வாறு குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் எம் பியுமான உதய கம்மன்பில.

