கொழும்பு மேயருடன் ஜனாதிபதி முறுகள்
கொழும்பு மாநகரின் கழிவகற்றல் மற்றும் மாநகரசபையின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்து கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
இதற்காக அவசர சந்திப்புக்கு வருமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்காவுக்கு ஜனாதிபதியிடம் இருந்து விசேட பணிப்புரை.
ஏற்கனவே பெருமளவு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கொழும்பு மாநாகர சபை, நிர்வாக சீர்கேடுகளால் மேலும் பல இழப்புகளை சந்தித்து வருவதாகவும் கழிவகற்றல் பணி முறையாக நடக்காத காரணத்தினால் மாநகரத்தின் அழகும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
