ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளாரென தெரிகிறது.
ஜாதிக்க ஹெல உறுமய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் முக்கிய பங்காளியாக இருந்து வந்தது.ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வகையில் அக்கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளார் சம்பிக்க.சம்பிக்கவின் இந்த தீர்மானத்திற்கு ஜாதிக்க ஹெல உறுமயவின் அரசியல் குழு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
