Our Feeds


Saturday, November 23, 2019

www.shortnews.lk

மொட்டு பக்கம் இணைய முனைந்த கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் கதவடைத்தது பொது ஜன பெரமுன

 


ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரபல முஸ்லிம் கட்சியொன்றின் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொது ஜன பெரமுன கட்சியுடன் இணைவதற்கு  எடுத்த முழு முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அமைச்சுப் பதவிகளை இழந்துள்ள நிலையில் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஆளும் பொது ஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேரடி சந்திப்பை மேற்கொண்டு மொட்டு தரப்புக்கு தனது ஆதரவை தெரிவிக்க தயாரான கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை தம் பக்கம் இணைத்துக் கொள்ள முடியாது எனக் கூறி பொது ஜன பெரமுன தரப்பினர் மறுத்து விட்டதாக அறிய முடிகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »