”13 ஆவது திருத்த அமுலாக்கம், இலங்கையின்
வடக்கு கிழக்கு அபிவிருத்தி, இந்திய
வம்சாவவழி தமிழர் பகுதி அபிவிருத்தி உட்பட விடயங்கள், வீடமைப்பு
போன்றவற்றிக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும். பலம்மிக்க இலங்கை உருவாக
வேண்டுமென்பது இந்தியாவின் மட்டுமல்ல முழு பிராந்தியத்தினதும்
எதிர்பார்ப்பாகும். இலங்கையுடன் இந்தியா நெருங்கிய பிணைப்பை கொண்டுள்ளது.
அண்மித்த
நாடுகளின் முன்னுரிமை வரிசையில் இலங்கையும் உள்ளது. இந்தியா எப்போதும்
பயங்கரவாதத்தை எதிர்க்கிறது. பயங்கரவாதத்திற்கெதிரான செயற்பாடுகளுக்காக இந்தியா 50 மில்லியன்
டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கவுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து
நாங்கள் கருத்து பரிமாறிக் கொண்டோம். 13வது
திருத்த அமுலாக்கம் – தமிழரின் சமத்துவம், உரிமை
அவர்களுக்குரிய கெளரவத்தை உரிய முறையில் வழங்கும் திட்டத்தை அரசு முன்னெடுக்கும்
என எதிர்பார்க்கிறேன். இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற வழங்கப்படும் கடன் 400
மில்லியனாக நீடிக்கப்படும்.
இந்திய அரசின் உதவியுடன் 46 ஆயிரம்
வீடுகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன. மலையகப் பகுதிகளில் மேலும் 14 ஆயிரம்
வீடுகள் கட்டப்படவுள்ளன. சூரிய சக்தி மின் திட்டத்திற்காக 100
மில்லியன் டொலர் கடனாக வழங்கப்படும்”
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பின்
பின்னர் நடந்த இணை செய்தியாளர் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
தெரிவிப்பு.
