Our Feeds


Friday, November 29, 2019

www.shortnews.lk

தீவிரவாத ஒழிப்புக்கு 50 மில்லியன், மொத்தம் 400 மில்லியன் கடனுதவி - ஜனாதிபதியிடம் மோடி உறுதி

 


2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் உதவியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதில், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »