Our Feeds


Monday, November 18, 2019

www.shortnews.lk

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி

 



நாட்டின் 7 ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து இன்று (18) கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளில் விலையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாள் முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 106.54 ஆக அதிகரித்து 6,129.56 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த பரிவர்த்தனை தினத்துடன் (15) ஒப்பிடுகையில் 1.77 சதவீத வளர்ச்சியாகும்.

இதேவேளை, S&P SL20 சுட்டெண் 68.56 ஆக அதிகரித்து நாள் நிறைவடையும் போது 3,055.08 ஆக பதிவாகியிருந்தது.

அதேபோல், இன்றைய நாள் முடிவில் மொத்த புரள்வு 2.41 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தமை விசேடம்சமாகும்.

2019 ஆம் ஆண்டினுள் இதுவரை பதிவான அதிகப்படியான விலைச்சுட்டெண்ணாக 6,067.66 புள்ளிகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினத்தின் அனைத்து விலைச்சுட்டெண்ணின் வளர்ச்சியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொழும்பு கோல்ட் ஸ்டோர்ஸ், டிஸ்டிலரீஸ் ஶ்ரீ லங்கா, கொமர்ஷல் வங்கி மற்றும் டயலொக் ஆசியாடா ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »