Our Feeds


Monday, November 18, 2019

www.shortnews.lk

புதிய ஜனாதிபதிக்கு வலிமையும், மனோதைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் - ரிஷாத் பதியுத்தீன்

 



இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மை தங்கிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் எனது மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரமேதாசவுக்கு ஆதரவளித்து, வாக்களித்த அனைவருக்கும் எனது விஷேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் செயற்படுவாரென நம்புகின்றோம்.

நமது நாடென்ற வகையில் இன ஐக்கியத்துடனும் சகோதர மனப்பாங்குடனும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல புதிய ஜனாதிபதிக்கு வலிமையும் மனோதைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »