Our Feeds


Monday, November 18, 2019

www.shortnews.lk

நாம் எதிர்பார்த்த முடிவு கிடைக்க வில்லை - மக்கள் ஆணையை ஏற்றுக் கொள்கிறோம்

 



இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தாம் எதிர்ப்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (18) அக்கட்சி தலைமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எமக்கு எதிர்பார்க்கப்பட்ட ஒரு இலக்கு இருந்தது. எனினும் பிரதான இரு அதிகார தளங்கள் இருக்கும் போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சிரமம். அதனை அறிந்து கொண்டுதான் நாங்கள் களமிறங்கினோம். எனினும், நாங்கள் ஒரு தேர்தல் முடிவை எதிர்ப்பார்த்தோம். நாம் எதிர்பார்த்த முடிவு தேர்தல் முடிவுகள் மூலம் கிடைக்கவில்லை.

மாற்றத்தையே மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். இது பொதுமக்களின் விருப்பதிற்கேற்ப இடம்பெற்ற பரிமாற்றமாகும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு இணங்க வேண்டும். இந்த மக்கள் ஆணையை நாம் ஏற்க வேண்டும். அதனை கொண்டு நாங்கள் செயற்படவுள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »