ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிய அரசு குறித்து அறிவிப்பை
வெளியிட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் பலர் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதுடன்
இன்று தமது அமைச்சு அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்கள் மற்றும் தமக்குரிய உடைமைகளை
எடுத்துக் கொண்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர் என அறியமுடிந்தது.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல்
குழுக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் அவரது இல்லத்தில்
நடக்கவுள்ளது.பாராளுமன்ற தேர்தலொன்று வரவுள்ள சூழல் குறித்தும் அப்படி வருமாயின்
போட்டியிடுவது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்படவுள்ளது.
இதற்கிடையில் ஆளுங்கட்சியின் முக்கியமான கூட்டமொன்று இன்று
மாலை பிரதமர் ரணில் நடக்கவுள்ளது .பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வது குறித்து
இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
