Our Feeds


Thursday, November 7, 2019

www.shortnews.lk

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை நிலவும் - வளிமண்டலவியல் தினைக்களம்

 



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் ஒரு சூறாவளியாக விருத்தியடைந்துவட அகலாங்கு 13.8N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3E இற்கும் அருகில்மையம் கொண்டுள்ளது.இதுஅடுத்த 24 மணித்தியாலங்களில்ஒருபலத்த சூறாவளியாக விருத்தியடைவதுடன் அதற்கு அடுத்த 36 மணித்தியாலங்களில்ஒருமிகக் கடும் சூறாவளியாக விருத்தியடைந்துவடக்கு - வடமேற்கு திசையில் பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதுஅடுத்த 48 மணித்தியாலங்களில்ஒருசூறாவளியாக மேலும் விருத்தியடைந்துமேற்கு - வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட அகலாங்கு 13N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85E - 91E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும்காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »