Our Feeds


Tuesday, November 26, 2019

www.shortnews.lk

புதிய ஆளுனர்கள்: கிழக்குக்கு அனுராதா, வடக்கு முரளிதரன், வட மத்தி Dr திஸ்ஸ .

 

புதிய ஆளுனர்கள்: கிழக்குக்கு அனுராதா, வடக்கு முரளிதரன், வட மத்தி Dr திஸ்ஸ.


கிழக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு நியமிக்கப்படவிருந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வடமத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது. 

முன்னதாக அவர் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படவிருந்தார். இருந்தபோதும் இறுதிநேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுனராக பிரபல தொழிலதிபரும், அரசியல் ஆர்வலருமான அனுராதா யஹம்பத் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

“நாட்டுப்பற்று வல்லுநர்களின் கருத்துக்களம் “ அமைப்பினூடாக கடந்த காலங்களில் அனுராதா அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »