வில்பத்து தேசிய வனப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் இடங்கள் தவிரவுள்ள பகுதியை புதிய வர்த்தமானி அறிவிப்பு மூலம் எல்லைப்படுத்தப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் இன்று (25) மனுவொன்றின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சட்ட மா அதிபருக்காக ஆஜராகியிருந்த அரசாங்கத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி மனோஹர ஜயசிங்க இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
வில்பத்து தேசிய வனப் பகுதியில் காட்டுப் பகுதிக்கு உரிய ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தை சட்ட விரோதமாக துண்டாடப்பட்டு மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் என்பவற்றை முன்னெடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சூழல் உரிமைகளுக்கான கேந்திர நிலையம் முன்வைத்திருந்த ரீட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த எல்லை வகுப்பது தொடர்பிலான தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரீட் மனு ஜனக் டி சில்வா மற்றும் பந்துல நிஸ்ஸங்க கருணாரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
